ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் | பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு |

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடித்து வருகின்றனர். இவர்கள் அல்லாமல் இன்னொரு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கின்றார்.
இந்த நிலையில் இதில் இரண்டாம் கட்ட கதாநாயகியாக மற்றொரு பாலிவுட் நடிகை தாரா சுடாரியா நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஹிந்தியில் ஸ்டுடண்ட் ஆப் தி இயர் 2, ஹீரோபன்டி 2, அபூர்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஆல்பங்களிலும் தோன்றியுள்ளார்.