இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளிந்த 'கல்கி 2898 ஏடி' படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஹிந்தியில் மட்டும் இப்படம் கடந்த வாரம் வரை 280 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' வசூலைக் காட்டிலும் இது சில கோடிகள் அதிகம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடித்தால் 300 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு முன்பாக 'கேஜிஎப்' படம் 400 கோடிக்கு அதிகமாகவும், 'பாகுபலி 2' படம் 500 கோடிக்கு அதிகமாகவும் ஹிந்தியில் வசூலித்துள்ளது.
2024ல் இதுவரை வெளிவந்த ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என 'கல்கி 2898 ஏடி' படம் அமைந்துள்ளது. தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.