போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'.
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் வசூல் நடிகர்களில் முதன்மையானவர் விஜய். அவர் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் இசையமைப்பது இது இரண்டாவது முறை. 2003ல் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'புதிய கீதை' படத்திற்குப் பிறகு இப்போதுதான் விஜய், யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
'புதிய கீதை' படத்தின் பாடல்கள் அப்போதைய காலகட்டத்தில் டிவி சானல்களில் அதிகம் ஒளிபரப்பான பாடல்களாக இருந்தன. அதன்பின் விஜய், யுவன் கூட்டணி ஏனோ இணையவில்லை.
இப்போது 'தி கோட்' படத்தில் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வழக்கம் போல பின்னணி இசையில் யுவன் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்திற்கான தீம் மியூசிக்கையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்நிலையில், 'மந்திரவாதி தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார்,' என படத்தின் பின்னணி இசை வேலையை யுவன் ஆரம்பித்துள்ளது குறித்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.