ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாக உள்ளது. இதையடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை தாம்பரம் பகுதியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து 2025 ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2025 பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




