பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் | 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் | மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம் | தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் | 2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி' | மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'இந்தியன் 2'. படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியான 'டிரோல்'களும் இப்படத்தின் வசூலைப் பெரிதும் பாதித்தது. எதிர்பார்த்த தியேட்டர் வசூலும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 'இந்தியன் 3' படத்தை பெரிய அளவில் ஓட வைக்க வேண்டுமென படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மூன்றாம் பாகத்தில் உள்ள சில காட்சிகளை மாற்றி அதற்குப் பதிலாக வேறு காட்சிகளை படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
இது சம்பந்தமாக கமல்ஹாசன், ஷங்கர் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதற்கான செலவை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்காமல், அந்த செலவை தான் ஏற்கிறேன் என கமல்ஹாசன் சொல்லியிருக்கிறாராம்.
'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் காப்பியை முடித்த பிறகுதான் ஷங்கர் 'இந்தியன் 3' பக்கம் வருவார் என்பதும் கோலிவுட் தகவல். இரண்டில் விட்டதை மூன்றில் பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.




