நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க செயலாளராக இருக்கும் இவர், கடந்த 2017-19 காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்த காலக்கட்டத்தில் சங்கத்தில் இருந்த ரூ.12 கோடி நிதியை முறைகேடாக செலவழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த தொகையை அவர் திருப்பி தர சொல்லி தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பலமுறை தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் விஷால் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன்பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.