தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அதிவி சேஷ். இவர் தற்போது நடித்துவரும் படம் 'டகாய்ட் எ லவ் ஸ்டோரி'. இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. வரும் மார்ச் மாதம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சரியாக அதே தேதியில் தான் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படமும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் யஷ் படத்துடன் உங்கள் படத்தை ரிலீஸ் செய்கிறீர்களே என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அதிவி சேஷ், “எனக்கு யஷ் படத்துடன் மோதுவதில் எந்தவித பயமும் இல்லை. இரண்டு படங்கள் ஒன்றாக வெளியானாலே அதில் ஒன்று தோல்வியாக அமைந்து விடும் என்பது இங்கே உள்ள மீடியாக்கள் ஏற்படுத்தி வைத்த கருத்து. ஏன், லகான் மற்றும் கடார் என இரண்டு படங்கள் ஒன்றாக வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதே.
அது மட்டுமல்ல எப்போதுமே குறைந்த எதிர்பார்ப்புடன் நாம் படத்தை கொடுத்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அது மட்டுமல்ல, இதே யஷ் நடித்த கேஜிஎப் வெளியான போது ஷாருக்கான் நடித்த ஜீரோ திரைப்படம் வெளியானது. ஆனால் யஷ் கேஜிஎப் மூலம் ஆச்சரியத்தை நிகழ்த்தவில்லையா ? அதேபோலத்தான் இப்போது எங்கள் படத்தையும் ரிலீஸ் செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.