ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

இந்தியத் திரையுலகத்தின் ஆரம்ப கால சாதனையாளர்களில் ஒருவர் வி சாந்தாராம். இந்தியத் திரையுலகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இந்தியாவின் முதல் டெக்னின் கலர் படமான 'ஜனக் ஜனக் பாயல் பாஜே' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், தயாரித்தவர். தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
அந்தக் கால கதாநாயகியாக ஜெயஸ்ரீயை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் சாந்தாராம். தற்போது ஹிந்தியில் வி சாந்தாராம் பற்றிய பயோபிக் படத்தை உருவாக்கி வருகிறார்கள். 'வி சாந்தாராம் - த ரெபெல் ஆப் இந்தியன் சினிமா' என்ற தலைப்பிட்டுள்ள அப்படத்தை அபிஜீத் ஷிரிஷ் தேஷ்பாண்டே இயக்க, வி சாந்தாராம் கதாபாத்திரத்தில் சித்தாந்த் சதுர்வேதி நடிக்க, ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். அவர்களது தோற்றப் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
பழமையும் புதுமையும் கலந்த போஸ்டர்களாக அமைந்துள்ள அவையிரண்டும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்போஸ்டர்களுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.