தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

பல வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதர் இயக்கிய இளமை ததும்பிய படம் 'தென்றலே என்னைத் தொடு'. 80களின் பெல்பாட்டம் இளைஞர்களை கவரும் வகையின் தனது பாணியில் இருந்து சற்று விலகி ஜனரஞ்சகமாக இயக்கிய படம். மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மூலம்தான் ஜெயஸ்ரீ அறிமுகமானார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.ஜெயலட்சுமி, நடிகர்கள் எஸ்.ராஜம், எஸ்.பாலச்சந்தர் ஆகியோரின் பேத்தி. 1988ல் திருமணம் செய்யும்வரை பிஸியாக நடித்தார். கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான ஜெயஸ்ரீ 'மணல்கயிறு 2' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தென்றலே என்னைத் தொடு படத்தில் ஜெயஸ்ரீ பிகினி உடையில் நடித்ததே படத்தின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது.