டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சந்தோஷ் குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பல்டி'. உன்னி சிவலிங்கம் ,இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகாமுடன் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ப்ரீதி நாயகியாக நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.
இதை முன்னிட்டு படத்தின் அறிமுக விழா நடந்தது. விழாவில் சாந்தனு பேசியதாவது: 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். 'பல்டி' 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி.
இப்படம் மலையாளத்தில் ரீ எண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று 'தெரியும்' என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். ஒரு மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள். கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதுதான் படம்.
அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன். மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். என்றார்.