பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

மலையாள திரையுலகில் சமீபகாலமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் ஷேன் நிகம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே படப்பிடிப்பில் தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைப்பதில்லை என்று ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு சூழல் உருவான நிலையில் தற்போது அவற்றையெல்லாம் மாற்றி அமைத்து தொடர்ந்து படங்களில் சரியான முறையில் நடித்து வருகிறார். அப்படி தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இருமொழியில் உருவாகும் 'பல்டி' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பது குறித்து அதிரடியாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “கதைப்படி சம்பந்தப்பட்ட சிச்சுவேஷனுக்கு லிப்லாக் காட்சி தேவை என்றால் நானும் வேறு வழியில்லை என நடித்துவிட்டு போய்விடுவேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை காதலர்களின் நெருக்கத்தை காட்டுவதற்கு அதைவிட இன்னும் சிறப்பான வழிகள் இருக்கின்றன.. இப்படி சொல்வதைப் பார்த்தால் என்னை ரொம்ப பழைய ஆள் என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் என் படங்களை பார்க்கும்போது, என் குடும்பத்துடன் அமர்ந்து அதை பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.