நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வட இந்திய சினிமாவில் எப்போதும் இஸ்லாமிய கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் அது குறைவு. தற்போதைய காலகட்டத்தில்கூட அமீர், மீரா கதிரவன், ராஜ்கிரண் மாதிரி ஒரு சிலரே உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த இஸ்லாமிய இயக்குனர், தயாரிப்பாளர் என்று எப்.நாகூரை குறிப்பிடலாம். இவரது பூர்வீகம் இலங்கை என்றும் இவரது குடும்பத்தினர் நாகூரில் குடியேறியவர்கள் என்றும் கூறுவார்கள். 1950 முதல் 1960 வரை தமிழ் சினிமாவில் பல வடிவங்களில் இருந்துள்ளார். தயாரிப்பாளராக, இயக்குனராக, பைனான்சியராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் 'ஜெனோவா'. அந்த படத்தை இயக்கியது எப்.நாகூர்தான். நேரடியாக மலையாளத்தில் தயாரித்து, தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுதவிர 'நாம் இருவர், கீதா, ராஜாம்பாள், சந்ததி, அம்பிகாபதி, லைலா மஜ்னு' உள்ளிட்ட படங்களையும், சில தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். இவரைப் பற்றிய அதிகப்படியான மேல் விபரங்களோ, புகைப்படமோ கிடைக்கவில்லை, என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள்.