விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை | வசூலைக் குவிக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்? | தடை நீங்கியது : டிசம்பர் 12ல் 'அகண்டா 2' ரிலீஸ் அறிவிப்பு | நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் |

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ரவிகிரண் கோலா இயக்கத்தில் 'ரவுடி ஜனார்த்தனன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். முதல் முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர் என்பவர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 20 கோடி சம்பளமாக தர தயாராகவுள்ளனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தெலுங்கில் 'உப்பனா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.