ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? |

தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட சென்னை கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படடத்திற்கான அறிமுக வீடியோ வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் படப்பிடிப்பை துவக்காமல் இருந்து வந்தனர். சமீபத்தில் மலேசியா சென்ற சிம்பு மதுரையில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்து இருந்தார். இந்த படத்திற்காக சென்னையில் பிரமாண்டமான இரண்டு வடசென்னை அரங்கங்கள் அமைத்துள்ளனர். ஆனால் நேற்று முதல் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை, கோவில்பட்டியில் துவங்கியுள்ளது. சிம்பு கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு சில போட்டோக்களும் கசிந்துள்ளது.