‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து இப்படம் உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகை வாரத்தை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிவாஜி குடும்பத்தினரை அழைத்து மேடையில் கவுரவிக்க படக்குழு முடிவு செய்துள்ளனர். ஏனெனில், பராசக்தி என்றாலே இன்றைக்கும் சிவாஜி கணேசன் தான் நினைவுக்கு வருவார். அதனால் இந்த தலைப்பிற்காக படக்குழுவினர் அவரை கவுரவிக்கின்றனர்.
மேலும், இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் இதுவரை சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் இயக்கிய இயக்குனர்களை அழைக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.