சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

நடிகர் அஜித் ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் கார் ரேஸ் என பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களை பேசி உள்ளார். குறிப்பாக கரூர் சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், ‛‛அது தனி ஒரு நபரின் பொறுப்பல்ல. நம் அனைவரும் அதற்கு பொறுப்பு ஆவோம். இதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. கூட்டம் கூட்டுவதை விரும்பும் போக்கை கைவிட வேண்டும். அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
அஜித்தின் இந்த பேட்டிக்கு பின் அதுவே ஒரு பெரிய பேசு பொருளாக மாறியது. ஒரு பக்கம் அவர் விஜயை ஆதரித்து பேசினார் என இதுநாள் வரை அஜித்தை திட்டி வந்த விஜய் ரசிகர்கள் இந்த பேட்டியை கொண்டாடினர். மற்றொருபுறம் அவரின் பேட்டியை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அவர் யாருக்கும் ஆதரவு தரவில்லை, சமூகத்தில் இருக்கும் அனைவருக்குமே பொறுப்புள்ளது. ஏன் தான் உட்பட பொறுப்பு உள்ளதாக குறிப்பிட்டார். இது அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களாக முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இதுதொடர்பாக மீண்டும் ஒரு விளக்கம் அளித்து பேட்டி கொடுத்துள்ளார் அஜித். அதில் அவர் கூறியதாவது...
நான் அளித்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக ஒருசிலரால் அவர்களுடைய அஜெண்டாவுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக அவர்கள் இதை அஜித்திற்கும் விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பது போல ஆக்கிவிட்டனர்.
நாம் நச்சு கலந்த ஒரு சமூகமாக மாறிவிட்டோம். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் படங்களை பாருங்கள். ரேஸில் என்னை பின் தொடருங்கள் என்று சொல்லமாட்டேன். மோட்டார் ஸ்போர்ட்ஸை பின்தொடருங்கள். அரசிடம் இருந்து நிதி எதிர்பார்ப்பது தவறு. எப்போதெல்லாம் ரேஸில் உட்காருகிறேனோ அப்போதெல்லாம் உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். ஓட்டு அளிப்பதை நான் ஒரு குடிமகனின் கடமையாக பார்க்கிறேன். போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன் வாழ்த்தியிருக்கிறேன்.
என்னை பிடிக்காதவர்கள் எப்போதுமே நான் வேற்று மொழிக்காரன் என்றே கூறி வருகின்றனர். ஒருநாள் வரும் அன்று இதே நபர்கள் உரத்த குரலில் தமிழன் என்று என்னை அழைப்பார்கள். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும் இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை உங்களுடைய அன்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
தமிழகமே விழித்துக் கொள்... இந்தியாவே விழித்துக் கொள்...!
இவ்வாறு அஜித் தெரிவித்துள்ளார்.