கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

தக் லைப் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பு அறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த பல மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்திற்கு கமல் கதை எழுதியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார் என அறிவித்துள்ளனர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். குறிப்பாக லோகா சாப்டர் 1, அய்யப்பனும் கோசியும், நரிவேட்டா, சரிபொத்தா சனிவாரம், மாஃபியா சாப்டர் 1, போர் தொழில் போன்ற பிரபலமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து சுனில் கேஎஸ் ஒளிப்பதிவு செய்ய, ஷீமர் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.