பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987ம் ஆண்டு வெளியான படம் 'நாயகன்'. இப்படத்தில் கமலுடன் சரண்யா, கார்த்திகா, ஜனகராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழகத்தில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இந்த நாயகன் படத்தை நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் எஸ் .ஆர். பிலிம் பேக்டரி எஸ். ஆர் .ராஜன் என்பவர் நாயகன் படத்தின் ரீ ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை எங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது வி. எஸ் .பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அப்படத்தை முறைகேடாக ரிலீஸ் செய்கிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நாயகன் படத்தை ஒப்பந்த அடிப்படையில் ரீரிலீஸ் செய்வதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். அதனால் இப்படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. அதோடு நீதிபதி செந்தில்குமார், நாயகன் படத்தை தான் 16 முறை பார்த்திருப்பதாகவும், காட்சி வாரியாக தன்னால் இந்த படத்தை மீண்டும் சொல்ல முடியும் என்றும் ஒரு கருத்து கூறியிருக்கிறார்.