மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'இந்தியன் 2' | சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா |
2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் திரைக்கு வந்த படம் தெறி. இப்படத்தை தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்துள்ளார் இயக்குனர் அட்லி. அப்படத்தில் விஜய் நடித்த வேடத்தில் வருண் தவான் நடிக்க, சமந்தா ரோலில் கீர்த்தி சுரேசும், எமி ஜாக்சன் ரோலில் வாமிகாவும் நடித்துள்ளனர். இப்படத்தை காளீஸ் என்பவர் இயக்க, தமன் இசை அமைத்திருக்கிறார். தமிழை காட்டிலும் ஹிந்தியிலும் இன்னும் அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பேபி ஜான் படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை அட்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.