'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
சித்தார்த் மல்கோத்ரா இயக்கத்தில் ஹிந்தியில் அமீர்கான் மகன் ஜூனைத் கான் நாயகனாக அறிமுகமாகி உள்ள படம் ‛மகாராஜ்'. இவருடன் ஷாலினி பாண்டே, ஷர்வரி மற்றும் முதன்மை வேடத்தில் ஜெய்தீப் அஹ்லவாத் ஆகியோரும் நடித்துள்ளனர். ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்கு ஒருசாரர் பாராட்டும், மற்றொருபுறம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது பற்றியும், தனது நடிப்பிற்கு கிடைக்கும் பாராட்டுகள் பற்றியும் ஷர்வரி கூறியதாவது :
மகாராஜ் படத்தில் மக்கள் எனது நடிப்பை ஆச்சர்யமாக பார்ப்பதையும், பாராட்டுவதையும் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நடிகையாக ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு படிக்கட்டுகளாக அமைகின்றன. அதை சிறந்ததாக கொடுக்க முயற்சிக்கிறேன். இந்த மாதம் எனக்கு தொழில் ரீதியாக சிறப்பாக அமைந்துள்ளது. எனது கேரியரின் இரண்டாவது படமான முஞ்சாவில் இருந்து பெரிய பிளாக்பஸ்டரைப் பெறுவது ஒரு அற்புதமான அனுபவம். அது மகாராஜ் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்கிறார்.