தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் திரைக்கு வந்த படம் தெறி. இப்படத்தை தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்துள்ளார் இயக்குனர் அட்லி. அப்படத்தில் விஜய் நடித்த வேடத்தில் வருண் தவான் நடிக்க, சமந்தா ரோலில் கீர்த்தி சுரேசும், எமி ஜாக்சன் ரோலில் வாமிகாவும் நடித்துள்ளனர். இப்படத்தை காளீஸ் என்பவர் இயக்க, தமன் இசை அமைத்திருக்கிறார். தமிழை காட்டிலும் ஹிந்தியிலும் இன்னும் அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பேபி ஜான் படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. இது குறித்த அறிவிப்பை அட்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.