விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தெலுங்கில் கப்பார் சிங், மிரப்பகாய் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரிஷ் சங்கர். தற்போது இவரது இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் பச்சன். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியான ரெய்டு படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமீபத்தில் பதில் அளித்தார் ஹரிஷ் சங்கர். அப்போது ரசிகர் ஒருவர் தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்குகிறீர்கள், இந்த படம் ரீமேக் என்றாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. அதே சமயம் மிரப்பகாய் படம் போல உங்கள் ஒரிஜினல் கதையில் திறமையை வெளிக்காட்டும் விதமாக ஒரு படத்துடன் மீண்டும் வாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
காரணம் இதற்கு முன்பு ஹரிஷ் சங்கர் இயக்கிய கப்பார் சிங் மற்றும் கத்தல கொண்டா கணேஷ் ஆகியவை ரீமேக் படங்கள் தான். இப்போது மிஸ்டர் பக்சன் படமும் ரீமேக் என்பதால் அவரிடம் இப்படி ஒரு கேள்வியை ரசிகர் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கொஞ்சமும் கோபப்படாமல் கூலாக பதிலளித்துள்ள ஹரிஷ் சங்கர், “நண்பரே இந்த படத்தை பாருங்கள்.. ரீமேக் என்று சொன்னால் நீங்களே நம்ப மாட்டீர்கள்.. அந்த அளவிற்கு புதிதாக இருக்கும்.. நீங்கள் படம் பார்த்துவிட்டு என்னிடம் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் இருப்பவர்களுடன் ரொம்பவே நட்பாக பழகுபவன்.. எந்நேரமும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.