மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
விஜயதசமி, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு இந்த வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் சில முக்கிய படங்கள் வெளியாகின்றன. தமிழில் விஜய் நடித்துள்ள 'லியோ', தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள 'பகவந்த் கேசரி', ரவிதேஜா நடித்துள்ள 'டைகர் நாகேஸ்வர ராவ்', கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ள 'கோஸ்ட்', ஹிந்தியில் டைகர் ஷராப் நடித்துள்ள 'கணபத்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. அனைத்துப் படங்களுமே பான் இந்தியா என வெளியாவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தெலுங்கில் பாலகிருஷ்ணா, ரவிதேஜா ஆகியோரது படங்களை விடவும் விஜய் படமான 'லியோ' படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஐதராபாத் நகரில் காலை 6 மணி, 7 மணி, 8 மணிக்கு சிறப்புக் காட்சிகளும் இப்படத்திற்காக நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 'லியோ' படம் அங்கு தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகிறது. சில முக்கிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரண்டு படங்களுமே அதிகக் காட்சிகளில் வெளியாகின்றன.
'லியோ' படம் மூலம் விஜய் அங்கு தனது மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்த வாய்ப்புகள் அதிகம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.