கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? |

அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் மூலமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.




