காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேசிய விருதுக்குழுவின் ஜுரிகளில் ஒருவராக பொறுப்பு வகித்த மலையாள இயக்குனர் சஜின் பாபு என்பவர் தன்னை இந்த விழாவுக்கு அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார்கள் என பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார். மலையாளத்தில் வரவேற்பை பெற்ற பிரியாணி என்கிற படத்தை இயக்கியுள்ள சஜின் பாபு தேசிய விருதுக்கான படங்களை தமிழகம் மற்றும் மலையாளத்திலிருந்து தேர்ந்தெடுக்கும் குழுவில் ஜூரிகளில் ஒருவராக பொறுப்பேற்று இருந்தார்.
மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட 'நிசித்தோ' என்கிற படமும் தேசிய விருதுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறாமலும் தேசிய விருது கமிட்டி அறிவித்திருந்த சில விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விதமாக இல்லாமல் இருந்ததாலும் தேர்வு குழுவினரால் நிராகரிக்கப்பட்டது.
தேசிய விருதுக்கான படங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சஜின் பாபு, இப்படி ஒரு படத்தை தேசிய விருதுக்கு அனுப்பும்போது அதில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டாமா ? ஒரு நல்ல குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக உருவாகி இருந்தாலும் கூட இது போன்ற சில விஷயங்களால் அந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போகும் விதமாக அரசு தரப்பிலேயே இப்படி அலட்சியம் காட்டலாமா” என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்படி அவர் ஒரு பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இயக்குனர் சஜின் பாபுவை போனில் அழைத்து இதுபோன்று நீங்கள் பொதுவெளியில் விருதுக்குழு பற்றிய விவரங்களை வெளிப்படையாக பேசுவது தவறு.. இதனால் உங்களது ஜுரி பதவிக்கே ஆபத்து வரலாம் என்று மிரட்டும் தொனியில் கூறினாராம். தற்போது தேசிய விருதுக்குழு கமிட்டியில் தன்னுடன் இடம்பெற்ற மற்ற ஜூரிகள் அனைவருக்குமே இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வந்த நிலையில் தனக்கும் அதுபோல வரும் என காத்திருந்து இறுதிவரை அழைப்பு அனுப்பப்படாததால் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சஜின் பாபு.
“குறைகளை சுட்டிக் காட்டியதற்காக கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி குழு அதிகாரிகள் தேசிய திரைப்பட வளர்ச்சி கழக அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு அழைப்பு அளிக்காமல் புறக்கணித்துள்ளனர். நான் எந்த தவறான நோக்கத்திலும் என்னுடைய கருத்தை கூறவில்லை. நாளை இதுபோன்று வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் அப்படி கூறினேன்” என்றும் கூறியுள்ளார் சஜின் பாபு. இவரது இந்த பதிவு கேரள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.