அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
தெலுங்கு திரையுலகின் கமர்சியல் ஆக்ஷன் நடிகரான ரவிதேஜா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மிஸ்டர் பச்சன் என்கிற படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இயக்குனர் ஹரிஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ரெய்டு படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ளது. இந்த படத்தின் ஓப்பனிங் டைட்டில் காட்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவருடன் ஜோடியாக நடித்த நடிகை ரேகா ஆகியோர் இணைந்து இருப்பது போன்ற போஸ்டர் ஒன்று இடம்பெற்று இருந்ததாம்.
ஆனால் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த போஸ்டரை நீக்குமாறு கூறியதுடன் வேண்டுமென்றால் அமிதாப்பச்சன் உடன் அவரது மனைவி ஜெயாபச்சன் இணைந்து இருப்பது போன்ற போஸ்டரை வேண்டுமானால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் கூறினார்களாம். அதன்படியே மாற்றம் செய்து சென்சார் சான்றிதழ் பெற்று படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.