2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா. தற்போது பாலிவுட்டுக்கும் செல்கிறார். கடைசியாக மகேஷ் பாபு ஜோடியாக 'குண்டூர் காரம்' படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ரவி தேஜா நடிப்பில் வெளியான 'டமாகா' படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.
ரவி தேஜாவின் 75வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பானு போகவரபு இயக்குகிறார். 'டமாகா' படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கின. படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையையொட்டி திரையரங்குளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.