2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர்களின் பிறந்த நாட்களிலோ அல்லது அவர்கள் நடித்த ஹிட் படங்களின் பத்தாவது, இருபதாவது வருட நிறைவு நாட்களிலும் அவர்களது படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. அந்த வகையில் நடிகர் பவன் கல்யாண், கடந்த 1999ல் நடித்த தம்முடு திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக வரும் ஜூன் 15ம் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
அது மட்டுமல்ல சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் முதன்முறையாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பதையும் இந்த படத்தின் ரீ-ரிலீஸ் உடன் சேர்த்துக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
தம்முடு படத்தை இயக்குனர் பிஏ அருண் பிரசாத் இயக்கியிருந்தார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் தான் தமிழில் விஜய் நடிப்பில் பத்ரி என்கிற பெயரிலும் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் யுவா என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.