லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம் சில வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகி இவ்வளவு மோசமான வசூலைப் பெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு படமாக 'சர்பிரா' படம் அமைந்துவிட்டது.
தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படம்தான் ஹிந்தியில் 'சர்பிரா' ஆக மாறியது அனைவருக்கும் தெரிந்ததே. ஹிந்தியிலும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக சூர்யா, ஜோதிகா இருந்தனர். எப்படியும் பல கோடி வசூல் பெற்று லாபம் பார்க்கலாம் என்ற அவர்களது கணக்கு தப்பாகப் போய்விட்டது.
பாலிவுட் வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தின் மொத்த வசூல் 25 கோடிக்குள் முடிவுக்கு வரும் என்கிறார்கள். சுமார் 100 கோடிக்கும் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட படம், அதில் கால் பங்கு வசூலைப் பெறுவது என்பது மோசமான ஒன்று. ஓடிடியில் வெளிவந்த பிறகாவது இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.