இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் நடிகர் ஆகாஷ். இவர்களின் மகன் விஜய் ஸ்ரீஹரி. இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் மாம்போ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், விஜய் ஸ்ரீ ஹரியுடன் ஒரு சிங்கமும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. டி .இமான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை வனிதா விஜயகுமார், ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், எனது மகன் ஹீரோவானதை நினைத்து பெருமைப்படுகிறேன். ரசிகர்களும் மீடியாக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். விஜய் ஸ்ரீ என் மகன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். கடவுள் அவனுக்கு அருள் புரிய வேண்டும். இந்த படத்தை இயக்கும் பிரபு சாலமன், எங்களது வழிகாட்டியாக இருந்து வரும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு எனது நன்றி. இந்த போஸ்டரை பார்த்ததும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது என்று பதிவிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.
விஜய் ஸ்ரீ ஹரி தன் அப்பா, நடிகர் ஆகாஷ் உடன் வசித்து வருகிறார்.