பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாதவன். ஹிந்தியிலும் நடித்து அங்கும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். பொதுவாகவே திரைப்பிரபலங்களுக்கு மும்பையில் சொகுசு வீடு வாங்குவது என்பது கனவு அல்லது அது ஒரு கவுரவமாகவே பார்க்கிறார்கள். பல பாலிவுட் பிரபலங்கள் மும்பையின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாந்த்ராவில் வீடு வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மாதவனும் புதிதாக சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். மும்பையின் பாந்த்ரா குர்லாவில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் அவர் வாங்கிய வீட்டின் மதிப்பு ரூ.17.50 கோடியாம். சுமார் 4182 சதுர அடி அளவு கொண்ட இந்த வீட்டில் இரண்டு பார்க்கிங் இடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 22ல் இதற்கான பதிவு நடந்துள்ளது. வீட்டிற்கான ஸ்டாம்ப் டூட்டி மட்டும் ரூ.1.05 கோடியை மாதவன் கட்டி உள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.