சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். கடந்த 2009ம் ஆண்டு ஹிந்தியில் ‛லக்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல்படம் அவருக்கு ‛லக்' ஆக அமையவில்லை என்றாலும் அதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வளர்ந்தார். தற்போது பிரபாஸ் உடன் சலார் 2வில் நடிக்கிறார். சினிமாவிற்கு இவர் வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதுபற்றி இன்ஸ்டாவில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அதில், ‛‛15 ஆண்டுகள்... நம்பவே முடியவில்லை. சினிமாவில் இருப்பதற்காக எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் பார்த்து, வளர்ந்த மாய உலகில் நடிகையாக இருப்பது எனது பாக்கியம். இத்தனை ஆண்டுகளில் நிறைய பாடங்களையும், அழகான ரசிகர்களையும் தந்தமைக்கு நன்றி. ரசிகர்கள் இன்றி நிச்சயமாக நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன். அதிக அன்புடன் ஸ்ருதி” என பதிவிட்டுள்ளார்.




