ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
நடிகை வனிதா விஜயகுமார் நடித்து இயக்கிய 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படம் கடந்த 11ம் தேதி வெளிவந்தது. இதில் அவரது முன்னாள் காதலன் ராபர்ட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இளையராஜா இசை அமைத்த 'ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு..'. என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தன்னிடம் அனுமதி பெறாமல் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ''கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன் காமராஜன் படத்தில் நான் இசையமைத்த சிவராத்திரி என்ற பாடலை என் அனுமதியின்றி மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் விளம்பரத்திலும் என் பெயர் அனுமதியின்றி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்த பாடலை பயன்படுத்த, பாடல் மீது உரிமை பெற்றுள்ள சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் "திரைப்படம் வெளியாகி விட்டது. இந்தநிலையில், தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டுமென்றால், மனுதாரர் இழப்பீடு பெறலாம். இது குறித்து வனிதா தரப்பு பதில் அனுப்ப நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.