பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.,13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விழா தொடர்பாக தற்போது இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக, ஒரு முதல்வர், அரசு முனைப்புடன் செய்தது என்னால் நம்ப முடியவில்லை. எதற்காக எனக்கு இந்த பாராட்டுவிழா, இவ்வளவு அன்பு செலுத்த நான் என்ன செய்தேன் என முதல்வரிடம் கேட்டேன். அது நான் போட்ட இசையாக இருக்கலாம், அது வேறு சமாச்சாரம். அதனை அவர் தான் சொல்ல முடியும்.
இதனையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டுவிழா என்பது, சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் நடந்திருக்கிறது. முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும், உங்களைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என சொன்னதும் எனக்கு மேலும் ஊக்களிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.




