மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், ஷபீர், பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் 'மதராஸி'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் கடந்த 9 நாட்களில் 88 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதேபோல், மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்டு 28ம் தேதி திரைக்கு வந்த படம் 'லோகா சாப்டர்-1'. இந்த படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வரும் இந்த படம் திரைக்கு வந்து 17 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 235 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




