உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து, இயக்கி, நடித்த படம் 'மிசஸ் அண்ட் மிஸ்டர்', ராபர்ட், ஷகிலா, பாத்திமா பாபு, ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இளையராஜா இசையமைத்த 'சிவராத்திரி...' பாடல் இடம் பெற்றிருந்தது.
தனது அனுமதியின்றி இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனிதா விஜயகுமார் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருந்தார். "இளையராஜாவின் 4 ஆயிரத்து 850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களிடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தி உள்ளோம். படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதை நீக்கிவிட்டோம்'' என்று வனிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்டு 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.