200 கோடியை நெருங்கும் 'லோகா' | தனுசின் அடுத்த பட இயக்குனர்: தெலுங்கில் கவனம் செலுத்தும் ரகசியம் | இன்று விஜய் மகளுக்கு பிறந்தநாள்: எங்கே படிக்கிறார் தெரியுமா? | ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா? | நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் |
தனுஷ் நடித்த பாலிவுட் படம் 'ராஞ்சனா'. 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தை ஈராஸ் மீடியா நிறுவனம் மறு வெளியீடு செய்ய இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இது படைப்பாளியின் படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது. படத்தின் பலமே அதன் கிளைமாக்ஸ்தான் அதை வியாபாரத்திற்காக மாற்றுவதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் "படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்களிடம் உள்ளது. ஏ.ஐ. வசதி மூலமாக படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம். இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, கலையின் புதிய வடிவம். உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள் வழக்கம்தான். புதிய 'கிளைமேக்ஸ்' உடன் படம் வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.