ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பு தவிர்த்து சமூக சேவையில் மிகவும் அக்கறை கொண்டவர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல இடங்களில் ரத்தவங்கி நடத்தி வருகிறார். இந்த மாநிலங்களில் தனியார் நடத்தும் ரத்த வங்கிகளில் இதுதான் பெரிது என்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவதற்கென்றே தனி குழுவை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுகிறார். ஐதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் இது அமைகிறது. இந்த மருத்துவமனை கட்ட தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி மருத்துவ அறக்கட்டளைக்கு 20 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
”நான் சம்பாதித்தது எல்லாம் சினிமாவில்தான். சினிமா தொழிலாளர்களின் உழைப்பால்தான். அதை அவர்களுக்கு சிறிதளவேனும் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறேன். எத்தனை கோடி செலவானாலும் இதை கட்டிமுடிப்பேன்” என்கிறார் சிரஞ்சீவி.