வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முன்னனி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆக., 14ல் வெளியாகிறது. தற்போது படம் தொடர்பான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இதுகுறித்து லோகேஷ் கூறியதாவது, "கைதி 2 படத்தை தொடங்குவதற்கு இன்னும் 8 மாதங்கள் இடைவெளி உள்ளது. இதற்கிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலையை மேற்கொள்ள கடந்த சில மாதங்களாக புக்கெட் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்'' என்றார்.
லோகேஷ் பெரும்பாலும் அதிரடி, ஆக் ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதைகளையே இயக்கி வருகிறார். இப்போது நடிக்கும் படமும் கேங்ஸ்டர் கதையிலேயே உருவாகிறது.