ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த 'வாடிவாசல்' படம் கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய் விட்டது. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணுவிற்கு புதிய படம் ஒன்றை நடிகர் சிலம்பரசனை வைத்து இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. ஆனால், வட சென்னை 2 இல்லை என்பதை உறுதி செய்தார் வெற்றிமாறன்.
ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இதில் சிம்பு இரண்டு தோற்றத்தில் தோன்றி நடிக்கவுள்ளார். தற்போது சிம்பு சுமார் 10 கிலோ உடல் எடையை குறைக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்போது இந்த படத்திற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்குவதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.