கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 'குபேரா'. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தெலுங்கு சீனியர் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், “குபேரா படத்தில் தனுஷைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரால் மட்டுமே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நியாயம் சேர்க்க முடியும். அந்தக் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு நடித்திருந்தார். படத்தில் திருப்பதி காட்சியில் பார்த்த போது எனக்கு அவரை அடையாளமே தெரியவில்லை, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் அவரது நடிப்பில் உள்ளது. அப்படி இல்லையென்றால் அந்த விருதுகள் அதன் அர்த்தத்தை இழந்துவிடும். நீங்கள் ரொம்பவே ஈடுபாட்டுடன் நடிக்கிறீர்கள் தனுஷ். உங்கள் அர்ப்பணிப்பு தெரிகிறது.,” என்று பாராட்டிப் பேசினார்.
மேலும், நாகார்ஜுனா, ராஷ்மிகா, தேவிஸ்ரீ பிரசாத், இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரைப் பற்றியும் தனித்தனியே மிகவும் பாராட்டினார். முன்னதாக விழாவுக்கு வந்த சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் தனுஷ். அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் சிரஞ்சீவி.
'குபேரா' படம் மூன்று நாட்களில் 75 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.