ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

அயன் முகர்ஜி இயக்கத்தில், பிரிதம் இசையமைப்பில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் 'வார் 2'. ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. மூன்று மொழிகளுக்குமான டிரைலர் நேற்று யு டியூப் தளத்தில் வெளியானது.
24 மணி நேரத்திற்குள் அவை மொத்தமாக 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஹிந்தி டிரைலர் 25 மில்லியன், தெலுங்கு டிரைலர் 22 மில்லியன், தமிழ் டிரைலர் 6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. இந்தப் படம் மூலம் நேரடி ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார் தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர். அதனால், தெலுங்கிலும் இந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது டிரைலர் வரவேற்பிலேயே எதிரொலித்துள்ளது.
அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படமும் வெளியாக உள்ளது. இதனால், பான் இந்தியா அளவில் இரண்டு படங்களுக்கும் போட்டி அதிகமாக இருக்கும்.