‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

மோகித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஹிந்தித் திரைப்படம் 'சாயரா'. அறிமுக நடிகர்கள் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. நான்கு நாட்களில் இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தது. அறிமுகங்கள் நடித்த ஒரு படம் குறைந்த நாட்களில் அந்த சாதனையைப் புரிந்தது.
தற்போது உலக அளவில் இப்படம் 256 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 212.5 கோடி, வெளிநாடுகளில் 43.5 கோடி வசூலைக் கடந்துள்ளது. எப்படியும் 300 கோடி வசூலைக் கடப்பது உறுதி. முழுவதுமாக ஓடி முடிக்கும் போது 400 கோடி வசூலைக் கடக்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படங்களில் 'சாவா' படத்திற்கு அடுத்து இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.