ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அடுத்து அவரது 157வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதனை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வெங்கடேஷை வைத்து அனில் ரவிபுடி கடைசியாக 'சங்கராந்திக்கி வஸ்துனா' எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அதனால் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.