வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் |
பான் இந்தியா ஹீரோ என்று சிலரை சொல்வார்கள், அதுபோல பான் இந்தியா ஹீரோயின் ஷ்ரத்தா தாஸ். இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு மொழிகளோடு ஆங்கில படத்திலும் நடித்தவர். ஆனால் தமிழில் மட்டும் நடிக்காமல் இருந்தார். இப்போது சத்தமே இல்லாமல் அர்த்தம் என்ற சிறுபட்ஜெட் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். இதில் அவர் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதுகுறித்து ஷ்ரத்தா தாஸ் கூறியதாவது: இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். குழந்தை நட்சத்திரமாகவே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில வாய்ப்புகள் அமைந்தும் நடிக்க முடியாமல் போனது. இப்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறேன். இதில் நான் மனோதத்துவ டாக்டராக நடித்திருக்கிறேன். நான் நிஜமாகவே சைக்காரிஸ்ட் என்பதால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது.
என்னை பொருத்தவரை படத்தின் கதை என்ன? எனது கேரக்டர் என்ன என்று தான் பார்ப்பேன். உடன் நடிப்பது யார் என்று பார்ப்பதில்லை. அப்படித்தான் இந்த படத்திலும் நடிக்க சம்மதித்தேன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன். என்றார்.
அர்த்தம் படத்தை மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார், மணிகாந்த் தல்லகுடி இயக்கி உள்ளார். நந்தா, அஜய், ஆம்னி, ரோகினி உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி உள்ளது.