50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் |
தனுஷ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'இட்லி கடை'. ஒரு குடும்பப் பாங்கான படமாக வெளியான இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு படமாக இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. 'காந்தாரா சாப்டர் 1' படம் கூடவே போட்டிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் 'இட்லி கடை' படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.
கடந்த ஐந்து நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரமும் பெரிய படங்கள் இல்லாததால் வசூல் குறைய வாய்ப்பில்லை. இந்த வார இறுதி வரை கடந்து போனால் மேலும் சில கோடிகள் வசூலில் சேரும்.