நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

நடிகர் அஜித்குமார் தற்போது தனது குழுவினருடன் சர்வதேச கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றிகளையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி) லோகோவை இடம்பெற செய்திருந்தார். இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இதற்காக நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஜித் "தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்குத் துணை நின்று வந்துள்ளது. உயரிய இலக்குகளை நோக்கி அஜித்குமார் ரேஸிங் அணி முழு முயற்சியுடன் பயணிக்கும். சென்னையில் கடந்த ஆண்டு 'ஸ்ட்ரீட் ரேஸ்' கார் பந்தயத்தை தமிழக அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு உதவி வருகிறது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன். அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை எஸ்.டி.ஏ.டி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.




