ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மற்றொருபுறம் படப்பிடிப்பு இடைவெளியில் தனது கார் ரேஸ் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித் 15 ஆண்டுகளுக்கு பின் கார் ரேஸ் களத்தில் அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் களமிறங்குகிறார். இதற்காக விலையுர்ந்த கார்களை வாங்கி அதை ரேஸிற்கு தகுந்தபடி மாற்றி அமைத்து வருகிறார்.
துபாயில் நடைபெற உள்ள 24H கார் ரேஸில் அஜித் மற்றும் அவரது அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவரது போர்ஷே கார் தயாராகி உள்ளது. அந்தகாரில் இந்திய தேசிய கொடி, தமிழக விளையாட்டு துறையின் லோகோ(SDAT), அஜித் குமார் ரேஸிங், ஏகே உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தனக்காக தயாராகி உள்ள காருடன் அஜித் ரேஸ் களத்தில் போஸ் கொடுக்கும் போட்டோ தற்போது வைரலாகி உள்ளது. அதோடு அந்த கார் தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி வலைதளங்களில் வைரலானது.