மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து விவாகரத்து கோரி வழக்கும் தொடர்ந்தார். அதேசமயம் ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிச்சையானது என அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி.
இவர்களின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இருவரையும் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் இன்று(நவ., 27) நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமரச தீர்வு மையத்தில் சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் வழக்கை நீதிபதி டிச., 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.