பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வர்கள் சிலர் மட்டும்தான். சிலர் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள், சிலர் தியேட்டர்களைத் திறக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஏற்கெனவே ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏஎம்பி சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை சில வருடங்களுக்கு முன்பு திறந்தார்.
அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறக்க உள்ளார். மொத்தம் 7 தியேட்டர்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. தெலுங்கு ரசிகர்களிடம் உள்ள சினிமா மோகம் என்றுமே குறைந்ததில்லை. அவர்கள் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுவார்கள். அதனால், தியேட்டர்கள் திறப்பது நல்லதொரு வியாபார முதலீடுதான்.
மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.